Tuesday 8 August 2017

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர்!

எடப்பாடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கி, பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அர்த்தநாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக, அங்கு பயிலும் மாணவிகள் பெற்றோர்களிடம் கடந்த ஒரு மாதமாக புகார் கூறி வந்துள்ளனர். 

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் தலைமையாசிரியர் சுந்தரவடிவேலுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறிய தலைமை ஆசிரியர், அந்த ஆசிரியரைக் கண்டித்த பின்னர், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும், ஆசிரியர் அர்த்தநாரி, தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வருவதாக, மாணவிகள் மீண்டும் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுக்கையிட்டு, அங்கிருந்த ஆசிரியர் அர்த்தநாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், கச்சுப்பள்ளி சாலையில் அவர்கள்  சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையறிந்த மகுடஞ்சாவடி போலீசார் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர். 

இதனிடையே, மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் அர்த்தநாரியை பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர் லெப்சென்கோ வீழ்த்தினார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் சானியா ஜோஸ்னா ஒஸ்டபென்கோவை 6-6, 7-6 (7/2), 7-6 (7/5) என்ற செட் கணக்கில் தகுதிபெற்றார்.
அமெரிக்க வீரர் லெப்சென்கா, 31 வயதான உலகின் 68 வது இடத்தைப் பிடித்தார், 12-வது இடத்தில் உள்ள லாட்வியாவிற்கு எதிரான விஷயங்களைத் திருப்புவதற்கு முன், 6-1, 3-0 என்ற நேர்முகத் தொடரில் பங்கேற்றார். அவர் விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் ரோலண்ட் கார்ரோஸ் வெற்றியைப் பெற்றார் .
ஸ்பெயினின் கார்லா சுரேஸ் நவரோவை 6-1, 7-6 (7/5) என்ற கணக்கில் 14-வது விம்பிள்டனான பெட்ரா கிவிடோவா வீழ்த்தினார்.
தொடக்க செட் மூலம் கிவிடோவா ஓடினார், ஆனால் ஸ்பெயினார்டு ஆஃப் நேட் செட்ஸில் முடிவடைவதற்கு இரண்டாவது இடத்திலிருந்து 1-4 வரை வீழ்த்த வேண்டியிருந்தது.
முதல் விட்டம் கரோலினா பிஸ்க்ஸ்கோவா மற்றும் இரண்டாவது விதை சிமோன ஹலப் - கடந்த ஆண்டு கனடிய அரசை மாண்ட்ரீயலில் நடத்தியபோது, கனடாவில் முதல் முறையாக வென்றவர் யார் - முதன்முதலில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல் எட்டு வீரர்களில் ஒருவர்.
நேற்று நடந்த மற்றொரு ஆரம்ப ஆட்டத்தில் செக் பார்போரா ஸ்ட்ரிகோவா 13வது கிறிஸ்டினா மெலடெனோவிக் 6-2, 6-3 என்ற புள்ளிகளைப் பெற்றார்.
ஸ்ட்ரீகோவா, உலகில் 26 வது இடத்தைப் பிடித்தது, முதல் வரிசையில் 5-0 முன்னணிக்கு முதலிடம் பிடித்தது, மிலிடெனோவிக் தனது தாளத்தை கண்டுபிடிக்க போராடியது.
ஸ்டெட்கோவா முதல் முறையாக அவர் தொகுப்பை வழங்கியிருந்தாலும், இறுதியாக அது ஒரு காதல் விளையாட்டிற்கு உதவியது மற்றும் இரண்டாவது சட்டத்தில் 4-0 முன்னணி வகித்தது.

Thursday 20 March 2014

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது. காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது. 

தேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது. 

அதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.