2032–ம் ஆண்டில் பூமியின் மீது ராட்சத விண்கல் மோதி உலகம் அழியும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மாயன் காலண்டர் முடிவுக்கு வந்ததால் கடந்த ஆண்டில் (2012) உலகம் அழியும் என்ற பீதி எழுந்தது. ஆனால் அது போன்று எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், இன்னும் 19 ஆண்டுகளில் உலகம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஜோதிடம் தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின் மேதாவிகளான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் எரிகல் எனப்படும் ஆயிரக்கணக்கான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன.
ஆனால், அவற்றில் ஒரு சில ராட்சத கற்கள் பல துண்டுகளாக சிதறி பூமியில் விழுந்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல் விழுந்து சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் மற்றொரு ராட்சத விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது. 1300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.
அது 2032–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ம் தேதி பூமியை தாக்கும் ஆபத்து உள்ளது. இதை உக்ரைன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு வேளை இக்கல் பூமியை தாக்கினால் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதலாகும்.
அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என பெயரிடப்பட்டுள்ளது.
இதே போன்று மற்றொரு ராட்சத விண்கல் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலுக்கு 2007 வி.கே 184 என பெயரிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment