Saturday, 26 October 2013

வியக்கவைக்கும் வைக்கோல் குக்கர்...!

'வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.
''எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். 'அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்'' என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.
''சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்' என்றார் ரிஷி.
சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.
''இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது... இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்'' என்கிறார்.
ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
''விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்'' என்று 'பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

சிறகுகளின்  வாழ்த்துகள்...!

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு...!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்: இந்திய மருத்துவக் கழகம் தகவல்

மருத்துவப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றபின் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தற்போது ஒரு நுழைவுத் தேர்வினை எழுதுகின்றனர். ஐந்தரை வருட காலம் கொண்ட இளநிலைக் கல்வியின் கடைசி வருடம் மாணவர்களின் பயிற்சிக் காலமாகக் கருதப்படுகின்றது. இந்த வருடத்தில்தான் அவர்கள் தலைமை மருத்துவரின் கண்காணிப்பில் நோயாளிகளைப் பரிசோதிக்கத் துவங்குகின்றார்கள்.

இந்த பயிற்சிக் காலம் முடிந்தவுடன் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நோயாளிகளைக் கவனிப்பதைவிட மேற்படிப்புக்கான தங்களின் தயாரிப்புப் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டு தென்படுகின்றது. அது மட்டுமின்றி, இந்தியாவில் இதுநாள் வரை, மருத்துவப் படிப்பு முடிந்தபின் நேரடியாக மருத்துவத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு மருத்துவர்கள் எந்த தகுதித் தேர்வையும் எழுத வேண்டியதில்லை. இதனால், அவர்களின் திறமைகளோ, கல்வி மற்றும் அவர்களின் அனுபவ அறிவு போன்றவை திறனாய்வு செய்யப்படாமலே தொழில் துவங்கும் நிலை இருந்து வருகின்றது.

இந்தக் குறைகளை நீக்க வேண்டி சமீபத்தில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம் ஒன்றில் இளநிலை மாணவர்கள் தங்களது நான்கரை வருடப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்கு வேண்டிய நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும் என்றும், கடைசி வருட பயிற்சி காலத்தை முடித்தபின்னர் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள உதவும் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.  

கடைசி ஒரு வருட மருத்துவப்பயிற்சி என்பது மாணவர்களை நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு காலமாகும்.இந்தக் காலத்தில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி தங்களின் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நுழைவுத்தேர்விற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தை செலவிடுவது அவர்களின் கல்வி முறையைப் பாதிக்கும் என்று கர்நாடகா மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.சிக்கநஞ்சப்பா கூறுகின்றார். 

பாடத்திட்டங்களை முடித்த உடனே மேற்படிப்பு நுழைவுத்தேர்வையும் எழுதிவிடுவது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகளும் கருதுகின்றனர். மேலும் முதுநிலை நுழைவுத் தேர்வுகள் இணையதளம் மூலம் நடைபெறவும், சிறப்பு மருத்துவப்பிரிவுகளில் சேர விரும்புவோர் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்த தேர்வுகளில் கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனி: ஐபிஎம் நிறுவனம்: தினம் ஒரு தகவல்

மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். 


மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும். தற்போதுள்ள கணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கணனியை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், கணனி 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

பயனுள்ள இணையதள முகவரிகள்


நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, மொத்தம் 213 பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.

இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு ஆயிரத்து 372 பேர் தேர்வு பெற்றிருந்தனர். சென்னையில் பிரதானத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வினை 115 பேர் எழுதவில்லை. மொத்தம் 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

தேர்வு எப்படி இருந்தது? குரூப் 1 பிரதானத் தேர்வு மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. முதல் நாள் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அதில் 3 மதிப்பெண் கேள்விகள் 30-ம், 8 மதிப்பெண் கேள்விகள் 15-ம், 15 மதிப்பெண் கேள்விகள் ஆறும் கேட்கப்பட்டிருந்தன.

கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைப் போன்று இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், மின்சார தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எப்படி? தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கை போன்றவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அவர்கள் கூறினர். குரூப் 1 பிரதானத் தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு மிகவும் யோசித்து எழுத வேண்டியிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற இருக்கிறது.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 




அதிகாரம்: நீத்தார் பெருமை.


குறள் 21: 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


சாலமன் பாப்பையா உரை:


தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

பரிமேலழகர் உரை:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.).

Friday, 25 October 2013

ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கலாம்...!

ஆதார் எண் மூலம் காகித வடிவ ஆவணங்கள் இன்றி வங்கிக் கணக்கு தொடங்குவது இனி சாத்தியமாகும் என தேசிய அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.

இதற்கான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணும் அவரது வலது கை பெருவிரல் ரேகையும் மட்டும் போதுமானது என்றார்.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை. இதனால், இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், புலம்பி வருகின்றனர்.

இரு துறைகளிலும், பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும், இதுவரை நடக்கவில்லை. இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை என, தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ஆங்கில ஆசிரியர் மட்டுமே, இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே, ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: விரைவில், டி.இ.டி., தேர்வு முடிவு வரப்போகிறது. அப்போது, தொடக்கக் கல்வித் துறையில், 1,500 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில், 2,881 முதுகலை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

பிளஸ்–2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்


செப்டம்பர், அக்டோபர் 2013–ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25–10–2013 (இன்று) முதல் 30–10–2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படமாட்டாது. மேல்நிலை தேர்வினை சிறப்பு அனுமதி திட்டம் (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.
குரூப்–2 தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவருகிறது.
வழக்கமாக குரூப்–2 தேர்வு இரு வகைப்படும். ஒன்று எழுத்து தேர்வு மட்டும் உண்டு. நேர்முகத்தேர்வு கிடையாது. மற்றொன்று எழுத்துதேர்வும் உண்டு. நேர்முகத்தேர்வும் உண்டு.
இந்த குரூப்–2 தேர்வுக்கு முன்பு ஒரே தேர்வுதான் உண்டு. ஆனால் இப்போது குரூப்–1 தேர்வு போல, குரூப்–2 தேர்விலும் முதல்நிலைதேர்வு, மெயின்தேர்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது.
நேர்முதத்தேர்வு இல்லாத தேர்வில் மெயின்தேர்வில் அதிக மார்க் எடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். நேர்முகத்தேர்வு உள்ள பணிகளில் நேர்முகத்தேர்வில் உள்ள மதிப்பெண்ணும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் சேர்த்து கூட்டி அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
இந்த குரூப்–2 தேர்வில் முதல் நிலை மற்றும் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
கேள்வி முறையில் மாற்றம்
மெயின் தேர்வில் ஒரு கேள்வி கொடுத்து அதற்கு சரியான விடை உள்பட 4 விடை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை டிக் செய்தால் மதிப்பெண் உண்டு. இதற்கு ஆப்ஜெக்டிவ் முறை என்று பெயர். இந்த முறை உண்டு. அதே நேரத்தில் இந்த தேர்வு எழுதும் பட்டதாரிகள் எழுத்து திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை சோதிக்கும் வகையில் கட்டுரைகள் கேட்கப்பட உள்ளது.
இந்த புதிய முறையின் காரணமாக திறமை உள்ள பட்டதாரிகள் மட்டுமே பணிக்கு வர முடியும். ஒருவர் குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால் பின்னர் குரூப்–1 தேர்வு எழுதினால் அவர்களின் பணி அனுபவம் குரூப்–1 தேர்வுக்கு பக்க பலமாக இருக்கும். அதன் காரணமாக குரூப்–1 தேர்வில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்
குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால் 8 வருடத்தில் அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். எனவே அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வையும் எழுத ஏராளமான பட்டதாரிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Single electrons make waves


Long-sought effect could turn ordinary conductors into carriers of quantum information.

Researchers have succeeded in lifting a single charged particle from the sea of electrons in a nanoscale circuit, creating a solitary electron wave. The feat confirms a theoretical prediction made nearly two decades ago, and might enable single electrons to carry quantum information in the same way that photons convey information in quantum optical circuits. Quantum physicist Christian Glattli at the CEA Saclay nuclear research centre in Gif-sur-Yvette, France, and his colleagues describe the work today in Nature1.

To generate the electron wave, or excitation, Glattli and his collaborators used a prediction made 17 years ago by theoretical physicist Leonid Levitov, at the Massachusetts Institute of Technology in Cambridge, and his colleagues2. Levitov's team had calculated that applying a voltage that varies with time to a nanocircuit will typically stir up the sea of electrons in the wires, creating a complex quantum state. This would consist of a swell of energized electrons along with a set of 'holes', where missing electrons leave behind positively charged locations in the atomic lattice of the wire. But Levitov and his team predicted that if the voltage pulse varied in time according to a mathematical expression known as the Lorentzian distribution — a single, symmetrical peak — it would excite only a single electron to the surface of the sea.

Riding the wave

Glattli’s team applied just such a voltage pulse to a nanocircuit consisting of two electrodes connected by a narrow conducting region, all cooled to nearly absolute zero (35 millikelvin) to keep the system’s electrons quiescent. The researchers verified that each voltage pulse applied to one electrode produced a single-electron excitation that travelled through the conductor to the other electrode. Such excitations are analogous to the solitary waves — known as 'solitons' — that are sometimes seen moving down a canal while maintaining their shapes. Glattli and his colleagues thus called their electron excitations 'levitons' (Levitov solitons).
Unlike other sources of single-electron excitations, which require the fabrication of delicate nanostructures, the circuitry required for generating the levitons can be easily scaled up to build larger systems, say the researchers.
The beauty of the work is clearly the simplicity,” says theoretical physicist Peter Samuelsson of Lund University in Sweden, who was not part of the study. Generating levitons on demand “will first and foremost be used as a tool in the investigations of fundamental physics”, he says. Furthermore, levitons could ultimately act as the fundamental carriers of quantum information in solid-state quantum computers, writes theoretical physicist Christian Flindt of the University of Geneva in Switzerland in a related News & Views article.
"Essentially everything done with single or pairs of photons in quantum optics — like entanglement generation and detection, quantum teleportation and quantum cryptography — could be tested with levitons," says Samuelsson.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: வான்சிறப்பு.



குறள் 20: 
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


சாலமன் பாப்பையா உரை:

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

பரிமேலழகர் உரை:

யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)

Thursday, 24 October 2013

சிறகுகள் ரசித்தவை


ஹிட்லர் ஒருசமயம் மனநல
மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச்
சென்றார்.
அப்போது ‘வாழ்க ஹிட்லர்’
என்று மனநோயாளிகள் கோஷம்
எழுப்பினர் (ஹிட்லர்
போகுமிடங்களில்
அதுதான் நடைமுறையும் கூட).
ஒரேயொருவர் மட்டும் அமைதியாக
இருந்தார்.
ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ
மட்டும் ஏன் வாழ்க
என்று கூறவில்லை’ என்று கேட்டார்.
அதற்கு அவர் அமைதியாக “நான்
நோயாளி இல்லை,
நான்தான் இங்கு டாக்டர்" !!

காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்

தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ அமைப்பின் சார்பில் வெளிவரும் அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபி குடித்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்: ஆய்வில் தகவல்

உலகில் தோன்றும் பொதுவான புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோய் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றது. மற்றும் இறப்பிற்கான புற்றுநோய் காரணங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றது. இதிலும் ஈரல் செல்லியல் புற்றுநோய் என்பது உலகம் முழுவதிலும் காணப்படும் புற்றுநோயில் 90 சதவிகிதம் காணப்படுவதாகும்.

தங்களுடைய கடந்த கால ஆய்வுகள் காபி உடலுக்கு நல்லது, அதிலும் குறிப்பாக கல்லீரலுக்கு காபி நன்மையே செய்கின்றது என்று உறுதி செய்வதை ஆய்வாளரான கார்லோ லா வெக்கியா தெரிவிக்கின்றார். நீரிழிவு நோய் கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு காரணியாக விளங்கக்கூடும் என்ற நிலையில், காபி குடிப்பது நீரிழிவு நோயைக் குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாக உள்ளது.

இதுமட்டுமின்றி, ஈரல் நோய் மற்றும் கல்லீரல் என்சைம்களிடையே இதனுடைய நன்மை தரும் விளைவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று கூறும் வெக்கியா, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மரியோ நெகரி ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த நோய் தொற்று அறிவியல் பிரிவில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோன்ற முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும் இதற்கான நேரடித் தொடர்புகளை நிரூபிப்பது கடினமான ஒன்றாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓரளவு உண்மை இருக்கக்கூடும். கல்லீரல் மற்றும் செரிமான நோய்கள் உள்ளவர்கள் தாமாக முன்வந்து காபி குடிப்பதைக் குறைப்பதுவும்கூட காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினம் ஒரு தகவல் : தமிழகத்தில் குறையும் நிலத்தடி நீர்

வ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பாக நிலத்தடி நீர் பற்றி ஆய்வு செய்கிறார்கள். இதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆராய்ச்சி செய்யும். இந்த ஆண்டு இப்படி செய்யப்பட்ட ஆய்வில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆய்வின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்திருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டு இருக்கிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் இந்தியா முழுக்க சில கிணறுகளை மாதிரி கிணறுகளாக வைத்துக்கொண்டு நிலத்தடி நீரின் அளவை கண்காணிக்கிறது. முந்தைய 10 ஆண்டுகளில் இருந்த சராசரி நிலத்தடி நீர்மட்டம் ஒப்பிடப்படும்.
தமிழகத்தில 457 கிணறுகளில் இந்த ஆராய்ச்சி நடந்தது. 24 சதவீத கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், 76 சதவீத கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததை முதன்மையான காரணமாக சொல்லும் நிலத்தடி நீர் வாரியம், தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் ஒரு காரணம் என்கிறது. குறிப்பாக சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலைமை படுமோசம்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி மக்கள் இங்கு குடியேறுவதும், தொழிற்சாலைகள் பெருகுவதும் தண்ணீர் சுரண்டப்பட காரணமாகின்றன. தென் மாநிலங்களில் ஆந்திராவில் மட்டும்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. நாம் ஆழ்துளைக் கிணறு மூலம் தொடர்ந்து நீர் சுரண்டுவதால் நம் வருங்கால தலைமுறையை தவிக்க விடுகிறோம் என்பதை உணரவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை குறைவாக பயன்படுத்தி வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

செயற்கைகோள்கள் மூலம் இந்திய கடல் எல்லையை கண்காணிக்கிறது சீனா : பரபரப்பு தகவல்.!

இந்திய கடல் எல்லையை 19 அதிநவீன செயற்கைகோள்களின் உதவியுடன் சீனா கண்காணித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயலர் மற்றும் பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் அவினாஷ் சந்தர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். எனவே இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாம் நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த செயற்கைகோள்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




இதற்காக இந்தியா 80 முதல் 100 மிகவும் அதிநவீன செயற்கைகோள்களை உருவாக்கி கடல் எல்லையை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடலோர பாதுகாப்பில் மேற்கத்திய நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்திய கடல் எல்லையில் வானிலிருந்து ஆளில்லா சாதனம் மூலம் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு என நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். கடல் எல்லையில் கண்காணிப்பு குறித்து மணிக்கு மணி தகவல்கள் பெறும் வகையில் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவினாஷ் வலியுறுத்தினார்.

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.குரூப்–1 மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது.

குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10 வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட இப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது எழுத்துதேர்வுடன் நேர்முகத்தேர்வும் கொண்டது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வின் மதிப்பெண்ணை வைத்து நியமிப்பது குரூப்–2 ஏ தேர்வு ஆகும். குரூப்–2 தேர்வுக்கு முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது.

பின்னர் மெயின்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000 காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பணியிடங்கள் சேகரிக்கப்படவில்லை.

அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம் ஆகுவதற்கு காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில் இன்னும் 140 பேர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து இந்த வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.

செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனியாக படித்தவர்கள், பெயிலானவர்கள் எழுதிய செப்டம்பர் மாத எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாத பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் படித்து பெயிலானவர்கள், பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதுவோர் வருடத்திற்கு 2 முறை தேர்வு எழுதலாம். செப்டம்பர், அக்டோபர் மாதம் அல்லது மார்ச் மாதம் தேர்வு எழுத முடியும். அவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 48 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். பிளஸ்–2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

 இந்த முறை பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. முதல் முதலாக மாணவ–மாணவிகளின் விடைத்தாளில் ரகசிய கோடு கொடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை யாரும் பின்தொடர்ந்து மோசடி வேலையில் ஈடுபட முடியாது. இந்த முறைதான் வருகிற மார்ச் மாத தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாறாக அந்த மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. இது 30–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வருடம் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் கடந்த வருடத்தை விட விரைவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

தினம் ஒரு திருக்குறள்



குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: வான்சிறப்பு.


குறள் 19: 
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

பரிமேலழகர் உரை:

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).