Thursday, 17 October 2013

செவ்வாய்-க்கு செயற்கைக்கோள் அனுப்புகிறது இஸ்ரோ

சந்திராயனை அடுத்து செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வரும் 28 ஆம் தேதி மங்கள்யான் என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வரிசையில் செவ்வாய் கிரகத்திற்கு வரும் 28 ஆம் தேதி மங்கள்யான் என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை, கனிம வளங்கள் ஆகியவற்றை ஆராய்வதோடு, அங்கு உயிரினங்கள் வாழ அடிப்படை தேவையான மீத்தேன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் உள்ளதா என்பதை அறியவும் இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்கைக் கோளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 கருவிகள் வைக்கப்பட்டுள்ளன, அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழலை ஆய்வு செய்வதோடு, பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும்.

அக்டோபர் 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள இந்த செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தபடவுள்ளது.

இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment