Friday, 11 October 2013
தினம் ஒரு திருக்குறள்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: வான்சிறப்பு.
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).
Thursday, 10 October 2013
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 28 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம்
நிரப்பி உத்தரவு தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு
மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த
பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 28 மாவட்ட கல்வி அலுவலர்
அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலின் படி
வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அனைவரும் உடனடியாக
பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினம் ஒரு திருக்குறள்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன..
Tuesday, 8 October 2013
TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன
TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர்
தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A total No. of 167688 candidates applied for the written examination, and 159748 candidates appeared for the Written Examination. Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released (except Tamil subject) along with the revised key answer. The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.
Click below website and check ur mark
All the best..
http://111.118.182.232:82/
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade I Posts was held on 21.07.2013. A total No. of 167688 candidates applied for the written examination, and 159748 candidates appeared for the Written Examination. Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released (except Tamil subject) along with the revised key answer. The list of candidates called for Certificate Verification will be released by Teachers Recruitment Board separately.
Click below website and check ur mark
All the best..
http://111.118.182.232:82/
தினம் ஒரு திருக்குறள்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).
Monday, 7 October 2013
தினம் ஒரு திருக்குறள்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு | தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு
நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
Sunday, 6 October 2013
கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி
உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை
செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள்
டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள்
உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி
நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.
அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை
ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள்
போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில்
சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது
கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர்
பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும்.
இதைப்போல, பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு
ஆய்வுக்காக அனுப்பப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2,
சிறப்பாசிரியர் பயிற்சி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கிறார்கள்.
அவர்களின் சான்றிதழ்களை ஆவணங்களுடன் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி
செய்ய தேர்வுத் துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது.
சான்றிதழ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆய்வு செய்யும் ஊழியர்களின்
எண்ணிக்கை மிக மிக குறைவு. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க
முடியாததாகிறது.
இதற்கிடையே, அரசு மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோரின் சான்றிதழ்களையும்
சரிபார்த்து அனுப்ப வேண்டும்.இதையெல் லாம் கருத்தில் கொண்டு கல்விச்
சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை மிக விரைவாக சரிபார்க்கும் வகையில் ஆன்லைன்
வசதி திட்டத்தை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.
இதன்படி, அனைத்து கல்விச்சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே நொடியில் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துவிட முடியும்.
ஆன்லைன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு முதல் 1978-ம்
ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட 2 கோடி பழைய சான்றிதழ்கள் கம்ப்யூட்டர் மூலம்
ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து
அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சான்றிதழ்கள் முழு வீச்சில் ஸ்கேன் செய்யப்பட்டு
வருவதாகவும் அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.
அனைத்து ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்
மயமாக்கப் பட்டுவிட்டால் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஒரு நொடியில்
சரிபார்த்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்பட்டு மேற்படிப்பு படிக்கும் மாணவர்களும், அரசு பணியில் சேருவோரும் பெரிதும் பயன்பெறுவார்கள்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாண வர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு
தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்
திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும்
தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும்.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி
கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே
இடைநிலை ஆசிரியர் பணியிலோ, பட்டதாரி ஆசிரியர் பணியிலோ சேர முடியும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளி லும், தனியார் பள்ளிகளிலும் இதே நடைமுறைதான்
பின்பற்றப் படுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பதை
கருத்தில் கொண்டு பி.எட். மாணவர்களை படிக்கும் காலத்தி லேயே
தகுதித்தேர்வுக்கு தயார் படுத்தும் வண்ணம் ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான சிறப்பு தாள் ஒன்றை
சேர்த்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இந்த புதிய முயற்சி,
பி.எட். மாணவ-மாணவிகள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த
நிலையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பிலும் இந்த புதிய திட்டம்
செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது, தகுதித்தேர்வு பாடத்திட்டம்
தொடர்பான புதிய பாடத்தை இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் (ஆசிரியர் பயிற்சி
பட்டயப் படிப்பு) சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழ கத்தின் ஆலோசனை பெறப்படும் என்றார்.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்
நிலவுகிறது. அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக
நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த
வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 6
முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை முன்பு இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களுக்கு அனுமதி
அளிக் கப்பட்டு இருந்தாலும் அதில் காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் அவை
பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களாக மாற்றப்படுகின்றன. இதே நடைமுறைதான் அரசு
உதவி பெறும் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றன.
நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்
நியமனத்தின்போது 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத
இடங்கள் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
ஏற்கெனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியருக்கான
கல்வித் தகுதியை பெறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக
(50 சதவீதம்) நிரப்பப்படும் நிலையில், தமிழ், வரலாறு பாட ஆசிரியர்கள்
மட்டும் நேரடியாக நியமிக்கப்படுவதில்லை.
இந்த காலி இடங்கள் முழுக்க முழுக்க பதவி உயர்வு மூலம் மட்டுமே
நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக பி.எட். படித்த பி.ஏ. தமிழ், பி.லிட்.
தமிழ் இலக்கியம், பி.ஏ. வரலாறு பட்டதாரிகள் நேரடி பட்டதாரி ஆசிரியர் பணி
பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
'அனைத்து பட்டதாரிகளுமே 3 ஆண்டு படித்துத்தான் பட்டம் பெறுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து பி.எட். முடிக்கிறார்கள். ஆனால், அறிவியல், கணிதம்,
ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படும்போது தங்களுக்கு
மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?’ என்பது
பி.எட். படித்த தமிழ், வரலாறு பட்டதாரிகளின் கேள்வி.
அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி
ஆசிரியர் பணியிடம் மட்டுமே. முதுகலை பட்டம் பெற்றால் மேல்நிலைப் பள்ளிகளில்
முதுகலை ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்யலாம்.
தமிழ், வரலாறு பாடங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை இனிமேலாவது
கைவிட்டுவிட்டு மற்ற பாடங்களைப் போல நேரடி நியமனத்தை கொண்டுவர வேண்டும்
என்று பி.எட். முடித்த தமிழ், வரலாறு பட்டதாரிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். இந்த கல்வித் தகுதியுடன் பல்லாயிரக்கணக்கானோர்
வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் 45 வயது, 50
வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினம் ஒரு திருக்குறள்
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: பாயிரவியல்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).
Subscribe to:
Posts (Atom)