Sunday, 6 October 2013

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி

 உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.
அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதைப்போல, பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, சிறப்பாசிரியர் பயிற்சி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கிறார்கள். அவர்களின் சான்றிதழ்களை ஆவணங்களுடன் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய தேர்வுத் துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது.
சான்றிதழ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆய்வு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
இதற்கிடையே, அரசு மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோரின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.இதையெல் லாம் கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை மிக விரைவாக சரிபார்க்கும் வகையில் ஆன்லைன் வசதி திட்டத்தை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.
இதன்படி, அனைத்து கல்விச்சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே நொடியில் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துவிட முடியும்.
ஆன்லைன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட 2 கோடி பழைய சான்றிதழ்கள் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சான்றிதழ்கள் முழு வீச்சில் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.
அனைத்து ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுவிட்டால் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஒரு நொடியில் சரிபார்த்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்பட்டு மேற்படிப்பு படிக்கும் மாணவர்களும், அரசு பணியில் சேருவோரும் பெரிதும் பயன்பெறுவார்கள்

No comments:

Post a Comment