அண்டவெளியில் தனியாக மிதக்கும் கோள் கண்டுபிடிப்பு!
விண்வெளியில் எந்த ஒரு நட்சத்திர குடும்பத்தையும் சாராத ஒரு கிரகம் தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 80 ஒளி ஆண்டுகள் (Light year) தூரத்தில் இருக்கும் இந்த புதிய கிரகம்,வியாழன் கிரகத்தை விட 6 மடங்கு பெரியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கிரகங்களோடு ஒப்பிடும் போது, இக்கிரகம் உருவாகி சுமார் 12 மில்லியன் ஆண்டுகளாகியிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிரகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தால், வியாழன் போன்ற கிரகங்கள் உருவான போது எத்தகைய தன்மைகளை கொண்டிருந்தது போன்ற தகவல்களை அரிய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விண்வெளியில் இவ்வாறு தனியே மிதக்கும் தன்மையுடையவற்றில் இந்த கிரகம் தான் குறைவான எடை உடையதாக இருக்குமென அவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment