Thursday, 24 October 2013

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.குரூப்–1 மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது.

குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10 வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட இப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது எழுத்துதேர்வுடன் நேர்முகத்தேர்வும் கொண்டது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வின் மதிப்பெண்ணை வைத்து நியமிப்பது குரூப்–2 ஏ தேர்வு ஆகும். குரூப்–2 தேர்வுக்கு முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது.

பின்னர் மெயின்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000 காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பணியிடங்கள் சேகரிக்கப்படவில்லை.

அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம் ஆகுவதற்கு காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில் இன்னும் 140 பேர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து இந்த வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.

செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனியாக படித்தவர்கள், பெயிலானவர்கள் எழுதிய செப்டம்பர் மாத எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாத பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் படித்து பெயிலானவர்கள், பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதுவோர் வருடத்திற்கு 2 முறை தேர்வு எழுதலாம். செப்டம்பர், அக்டோபர் மாதம் அல்லது மார்ச் மாதம் தேர்வு எழுத முடியும். அவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 48 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். பிளஸ்–2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

 இந்த முறை பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. முதல் முதலாக மாணவ–மாணவிகளின் விடைத்தாளில் ரகசிய கோடு கொடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை யாரும் பின்தொடர்ந்து மோசடி வேலையில் ஈடுபட முடியாது. இந்த முறைதான் வருகிற மார்ச் மாத தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாறாக அந்த மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. இது 30–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வருடம் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் கடந்த வருடத்தை விட விரைவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

தினம் ஒரு திருக்குறள்



குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: வான்சிறப்பு.


குறள் 19: 
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

பரிமேலழகர் உரை:

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).