இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் வெறும் 40,000 கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் கே.சி.சக்ரபர்த்தி வங்கிக் கிளைகள் பற்றாக்குறையாக உள்ள நிலை மாற வேண்டும் என்றும் இந்தியாவில் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வங்கிகள் என்பவை மக்களின் வாழ்க்கையில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றம் ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என சக்ரபர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment