Wednesday, 23 October 2013

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை 350 மெகாவாட்டாக அதிகரிக்கும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகளுடன் கூடிய அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அணுஉலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து கடந்த ஜூலை மாதம் 13–ந்தேதி செயல்பட தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை 350 மெகாவாட்டாக அதிகரிக்கும் பணி தீவிரம்
அன்று முதல் அணுஉலை ரியாக்டரின் வெப்பநிலை உயர்த்தும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் கூடங்குளம் வந்து ஆய்வு செய்து மின்உற்பத்தியை தொடங்க கடந்த ஆகஸ்ட் மாதம் 14–ந்தேதி அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து அணுஉலை ரியாக்டரின் வெப்பநிலையை 1200 கிலோ வாட்டாக உயர்த்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று (22–ந்தேதி) அதிகாலை 2.45 மணியளவில் கூடங்குளம் அணுமின்நிலைய முதல் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கியது.
முதற்கட்டமாக 160 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு, நெல்லை அபிஷேகப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மின் தொகுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த பணிகள் சரியாக நடக்கின்றதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் மின்உற்பத்தியை அதிகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மின் உற்பத்தி இன்று மாலைக்குள் 350 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்து மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment