Friday 13 September 2013

பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல அரசு தடை விதித்து உள்ளது.

பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல அரசு தடை விதித்து உள்ளது. 

பள்ளிகளில் பாடம் நடத்தும் போது எஸ்.எம்.எஸ் அனுப்புவது, ஆபாச வீடியோக்கள் பகிர்ந்து கொள்வது, மாணவிகளை காமெரா மூலம் படம் பிடிப்பது, தேர்வில் மொபைல் போன் மூலம் நூதன முறையில் காப்பி அடிப்பது என்று மாணவர்களின் கவனம் சிதறி கல்வியில் கவனம் குறைகிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் ஆபாச புத்தகங்கள் மறைமுகமாக விற்கப்படும். தற்போது ஆபாச வீடியோக்களை மெமரி கார்டு மூலம் பதிந்து கொடுக்கும் தொழில் பெட்டிக்கடை வியாபாரம் ஆகி உள்ளது.

விஞ்ஞான வளர்ச்சி ஆக்கப் பூர்வமாக பயன்படுவதை போன்றே சீர்கேடுகளுக்கும் வித்தாகிறது. அரசின் இந்த முடிவு வரவேற்க தக்க வேண்டியது.

No comments:

Post a Comment