Wednesday 11 September 2013

காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது

காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. 

எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,

"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.

உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.

எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.

அதற்கு காமராசர்,

"நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.

அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்.

No comments:

Post a Comment