Saturday 28 September 2013

சூரிய புயலால் “விண்வெளி வானிலை” : செயற்கைகோள் பாதிக்கும் அபாயம்

பூமிக்கு அருகில் புதிதாக "விண்வெளி வானிலை" எனப்படும் ஸ்பேஸ் வெதர் (SPACE WEATHER) உருவாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து வெளியேறும் சூரிய புயல் மற்றும் புவியின் காந்தப்புலத்தால் இந்த ஸ்பேஸ் வெதர் (SPACE WEATHER) உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்டால் தொலை தொடர்பு அமைப்புகள், ஜி பி எஸ் (GPS) தொழில்நுட்பக் கோளாறு, மிகப்பெரிய மின் தடை, செயற்கைகோள் செயலிழப்பது போன்றவை ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வு, பூமியை சுற்றியுள்ள விண்வெளி சூழலை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறினர்.
சூரியனிலிருந்து வெளியாகும் சக்தியானது புவியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படுகிறது என்றும், விண்வெளி வானிலை என்பது புவி காந்த புலத்தில் உருவாகிறது என்றும் அவர்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
விண்கலங்கள் அனுப்பிய சமிக்ஞைகளிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment