Sunday 22 September 2013

இலங்கையில் ஆட்சியை பிடிக்கிறது தமிழர்கூட்டமைப்பு

இலங்கை வட மாகாண தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை கிடைத்த தகவலின்படி அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடிக்கிறது.
நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முல்லைத்தீவு வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்ற தொகுதிகளையும் கைப்பற்றி வருகிறது.
முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 28,266 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 7,209 வாக்குகளும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 199 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 197 வாக்குகள் கிடைத்துள்ளன.
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 37,079 வாக்குகள் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 7,897 வாக்குகளும் ஈழவர் ஜனநாயக முன்னணி 300 வாக்குகளும் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 54 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16,421 வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 2,416 வாக்குகள் கிடைத்துள் ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 வாக்குகளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதே போன்று ம்ன்னார், மாத்தளை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, காங்கேசன் துறை, நல்லூர் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

No comments:

Post a Comment