Thursday 24 October 2013

தினம் ஒரு தகவல் : தமிழகத்தில் குறையும் நிலத்தடி நீர்

வ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பாக நிலத்தடி நீர் பற்றி ஆய்வு செய்கிறார்கள். இதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆராய்ச்சி செய்யும். இந்த ஆண்டு இப்படி செய்யப்பட்ட ஆய்வில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆய்வின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்திருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டு இருக்கிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் இந்தியா முழுக்க சில கிணறுகளை மாதிரி கிணறுகளாக வைத்துக்கொண்டு நிலத்தடி நீரின் அளவை கண்காணிக்கிறது. முந்தைய 10 ஆண்டுகளில் இருந்த சராசரி நிலத்தடி நீர்மட்டம் ஒப்பிடப்படும்.
தமிழகத்தில 457 கிணறுகளில் இந்த ஆராய்ச்சி நடந்தது. 24 சதவீத கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், 76 சதவீத கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததை முதன்மையான காரணமாக சொல்லும் நிலத்தடி நீர் வாரியம், தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் ஒரு காரணம் என்கிறது. குறிப்பாக சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலைமை படுமோசம்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி மக்கள் இங்கு குடியேறுவதும், தொழிற்சாலைகள் பெருகுவதும் தண்ணீர் சுரண்டப்பட காரணமாகின்றன. தென் மாநிலங்களில் ஆந்திராவில் மட்டும்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. நாம் ஆழ்துளைக் கிணறு மூலம் தொடர்ந்து நீர் சுரண்டுவதால் நம் வருங்கால தலைமுறையை தவிக்க விடுகிறோம் என்பதை உணரவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை குறைவாக பயன்படுத்தி வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment